Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அலெர்ட்” வீட்டை விட்டு வெளியே வராதீங்க…. ஆபத்து இருந்தால் 1077-க்கு கால் பண்ணுங்க…. கலெக்டர் எச்சரிக்கை…!!

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நீலகிரி மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.  மேலும் மழை பாதிப்பு மீட்பு பணிக்காக 45 குழுக்கள், 250 முகாம்கள் தயார் நிலையில் உள்ளன எனவும், வீடுகளைச் சுற்றி ஆபத்தான பெரிய மரங்கள் இருந்தால், 1077 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |