Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (22-09-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு..!!

நாளைய  பஞ்சாங்கம்

22-09-2020, புரட்டாசி 06, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி இரவு 09.31 வரை பின்பு வளர்பிறை சப்தமி.

அனுஷம் நட்சத்திரம் இரவு 07.18 வரை பின்பு கேட்டை.

சித்தயோகம் இரவு 07.18 வரை பின்பு மரணயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

சஷ்டி விரதம்.

முருக வழிபாடு நல்லது.

கரி நாள்.

புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

 

இராகு காலம் மதியம் 03.00-04.30,

 எம கண்டம் காலை 09.00-10.30,

 குளிகன் மதியம் 12.00-1.30,

 சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

நாளைய ராசிப்பலன் – 22.09.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு தேவையில்லாமல் மன குழப்பம் ஏற்படும். சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் எந்த வேலையையும் பிறரை நம்பி கொடுக்காதீர்கள். தொழிலில் கவனம் செலுத்துங்கள். சுபகாரியங்களை தவிர்க்கவும்.வாகனங்களில் செல்லும் போது நிதானம் கொள்ளுங்கள் அதுவே நல்லது.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு தொழிலில் அமோகமான லாபம் கிட்டும். வீட்டில் பெரியவர்கள் உடனிருந்த பிரச்சனை நீங்கும்.புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை அனைத்தும் வெற்றியை கொடுக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் மனமகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல கூடும். ஆடை ஆபரணங்கள் வாங்க ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகள் கைகூடும். தொழிலில் புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை குறைந்து இருக்கும். உற்றார் உறவினர் வழியில் தேவையில்லாமல் பிரச்சினை ஏற்படும். உத்தியோகத்தில் எந்த முயற்சி எடுத்தாலும் சிந்தித்து செயல்பட வேண்டும். வெளி பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு மன அமைதி குறையும். தொழிலில் வேலை சுமை குறையும். உற்றார் உறவினர்களால்  வீண் செலவு ஏற்படும்.எந்த செயலிலும்  பொறுமையாக இருங்கள் அதுவே நல்லது. சிந்தித்து செயல்படுங்கள் வியாபாரத்தில் பலன் அதிகரிக்கும். சிக்கனமாக இருங்கள்.

கன்னி

உங்களின் ராசிக்குஉத்தியோகத்தில் முன்னேற்றம் நிலை இருக்கும். வீட்டில் குழந்தைகளால் சுப செலவு ஏற்படும்.பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடன்பிறந்தவர்களின் ஆதரவும் இருக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் அனைத்தும் விலகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு பொருளாதாரநிலை மந்தமாக இருக்கும். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களிடம் பொறுமையா சென்றால் பிரச்சினைகளிலிருந்து விலகலாம். தொழிலில் நினைத்த இடமாற்றம் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். சுபகாரியங்களில் இருந்த இடையூறுகள் விலகும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழிலில் நினைத்த இடமாற்றம் பெறுவீர். கொடுத்த கடன் அனைத்தும் வசூலாகும்.

தனுசு

உங்களின் ராசிக்குவீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும்.திருமண நிகழ்ச்சிகளில் தடைகளுக்குப்பின் முன்னேற்றம் அடையும். நண்பர்களிடம் வீண் பேச்சை தவிர்க்கவும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லுங்கள் அதுவே உத்தமம். உத்தியோகத்தில் கூட்டாளிகளின் அன்பு கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு  திறமை அனைத்தும் வெளி வரும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சுபகாரியங்களில் முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய வாய்ப்பு அமையும். தொழிலில் லாபம் பெருகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு உறவினர்களிடம் இருந்து மன மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். தொழிலில் சக ஊழியர்கள் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிடைக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

மீனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சி இல்லாத சூழ்நிலை உருவாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் தாமதமாக வரும். தொழிலில் வேலை சுமையுடன் அலைச்சலும் கூடும். வெளி பயணங்களால் அனுகூலம் கிட்டும். பொருளாதார சுமை ஓரளவு குறையும்.

Categories

Tech |