தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,47,000ஐ கடந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 60 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழ்நாட்டின் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 5,344 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகி இருப்பதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 5,47,337 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் காரணமாக 60 பேர் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,871ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 982 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து சென்னையில் இதுவரை 1,56,625 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 5,492 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 4,91,971 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுவந்திருக்கின்றனர். தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் நேற்று 648 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் 295 பேருக்கும், செங்கல்பட்டில் 219 பேருக்கும், திருவள்ளூரில் 212 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.