தேனி மாவட்டத்தில் இன்று மேலும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,323 ஆக அதிகரித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது இதனால் சென்னை தான் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் தேனியில் இன்று 46 பேருக்கு கொரோனா உறுதியானதால் ஏற்கனவே 14, 277 ஆக இருந்த எண்ணிக்கை இப்போது 14,323 ஆக அதிகரித்துள்ளது.இதில் 13,562பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் .உயிரிழந்தோர் எண்ணிக்கை 168 உள்ளது.