Categories
மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு சாத்தியமில்லை -அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா வேகமாகப் பரவ தொடங்கியதால் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன.தற்போது  மாணவர்கள் ஆன்லைன் மூலம் பாடங்களை கற்று வருகின்றனர் பள்ளி திறப்பது எப்போது என்று மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பதாவது பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்பு இல்லை , 2.5 இலட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்த நிலையில் செப்டம்பர் இறுதி வரை சேர்க்கைகள் நடைபெறும் என்றும் ,15 இடங்களில் தொடக்கப் பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலைப் பள்ளிகளும் தொடங்கப்படுகிறது.முழுமையான கல்வி கட்டணத்தை வசூலித்த தனியார் பள்ளிகளின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

Categories

Tech |