Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா பாதிப்பு – உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்..!!

உலக அளவில் ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா பரவல்  வேகம் எடுத்து உள்ளது. அந்த வகையில் கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கொரோனா  தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இது கொரோனா கண்டறியப்பட்டது முதல் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

முந்தைய வார்த்தை ஒப்பிடுகையில் இது ஆறு சதவீதம் அதிகம் என கூறியுள்ள உலக சுகாதார அமைப்பு எனினும் இந்த வாரத்தில் பலி எண்ணிக்கை 10 சதம் குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த 20 லட்சம் மதிப்பில் அதிகபட்சமாக 38 சதத்திற்கும் அதிகமானோர் வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர் என்பது நினைவுகூரத்தக்கது.

Categories

Tech |