Categories
உலக செய்திகள் கொரோனா

பிற நாடுகளுடன் போரில் ஈடுபடும் எண்ணம் சீனாவுக்கு இல்லை – சீன அதிபர்..!!

எந்த ஒரு நாட்டுடனும் போரில் ஈடுபட சீனாவுக்கு எண்ணமில்லை என அந்நாட்டு அதிபர் திரு ஷி ஜின்பிங் கூறியுள்ளார்.

ஐநா சபையின் 75 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பொது சபை கூட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதில் உலக தலைவர்கள் பலரும் உரையாற்றி வருகின்றனர். அதன்படி சீன அதிபர் திரு ஜீ ஜின்பிங் காணொலி காட்சி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் எந்த ஒரு  நாட்டுடனும் போரில் ஈடுபடும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்றும் மற்ற நாடுகளுடன் உள்ள கருத்து வேறுபாடுகள் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சிகள் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று கூறினார். கொரோனா விவகாரத்தை அரசியல் ஆக்கும் அல்லது கலங்கப்படுத்தும் எந்த ஒரு முயற்சியையும் நிராகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |