Categories
மாநில செய்திகள்

கடனை திருப்பி செலுத்த 2 ஆண்டுகள் அவகாசம் – எஸ்.பி.ஐ. வங்கி..!!

வீட்டுக் கடன்கள் மற்றும் சில்லரை கடன்களை வாடிக்கையாளர்கள் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை இரண்டு ஆண்டுகள் வரை பாரத ஸ்டேட் வங்கி நீட்டித்துள்ளது.

கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தாங்கள் பெற்ற வீட்டு கடன் அல்லது சில்லறை கடனை திருப்பி செலுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொள்ளலாம், அல்லது மாத தவணையை இரண்டு ஆண்டுகளுக்கு மறுசீரமைப்பு செய்து நீட்டித்துக் கொள்ளலாம் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது.

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதிக்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று இதுவரை தவணை தொகையை தவறாமல் செலுத்தி கொரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம் என பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு கடன் மறு சீரமைப்பு நீட்டித்து திட்டத்தை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களிடம் ஆண்டுக்கு கூடுதலாக 0.35 சதவிகிதம் வட்டி வசூலிக்கப்படும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி கூறியிருக்கிறது. இந்த சலுகையைப் பெற விரும்பும் எஸ்பிஐ சலுகை வாடிக்கையாளர்கள் முதலில் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டு சம்பந்தப்பட்ட வங்கி கிளையை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |