இந்தி தெரியாத காரணத்தால் கடன் வழங்க முடியாது என்று ஜெயம்கொண்டான் வங்கி மேலாளர் கூறியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸ் தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிக்கு ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஒருவர் கடன் வாங்க வந்த பொழுது வட இந்தியாவை சேர்ந்த வங்கி மேலாளர் இந்தி தெரியவில்லை என்றால் கடன் கிடையாது என கூறியுள்ளார், இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டு வங்கியில் பணிபுரிந்து கொண்டு இந்தி தெரியவில்லை என்றால் கடன் வழங்க முடியாது என கூறிய மேலாளரை தமிழகத்தின் பணியாற்ற தகுதியற்றவர் அதனால் அவரை உத்திரபிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலத்திற்கு வங்கி நிர்வாகம் விரட்டியடிக்க வேண்டும்.
மத்திய அரசுத் துறை அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ளூர் மக்களையே பணியில் அமர்த்த வேண்டும் என பா.ம.க தொடர்ந்து வலியுறுத்துகின்றது.அதை அரசு செயல்படுத்தாதல் இத்தகைய கூத்துகள் நடக்கின்றன. இனிமேலாவது நிலைமை மாறவேண்டும் என்று பதிவிட்டுள்ளார்