சாதம் வடித்த தண்ணீரில் விழுந்த ஒன்றை மாத வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் கனகம் பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி யுவராணி இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.இதில் ஒன்றரை வயது ஆன இளையமகன் மணீஸ்வரன் கடந்த 12ஆம் தேதி வீட்டில் விளையாடியபோது சாதம் வடித்த தண்ணீரில் தவறி விழுந்தான்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் சென்னை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர் ஆனால் நேற்று முன்தினம் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து தூசி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.