தனுசு ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் திறமைகளை சோதிக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதால் பொறுமையாக இருக்கவேண்டும்.
உங்களின் முன்னேற்றத்தில் மந்தநிலை காணப்படும். அதிகமாக சிந்திக்காமல் தெளிவான மனநிலையுடன் இருங்கள். இன்று பணிகள் சலிப்பை கொடுக்கும் வகையில் இருக்கும். அதிக பணிகள் காரணமாக சில பணிகளை நிலுவையில் வைப்பீர்கள். திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இன்று உங்களின் துணையிடம் உணர்ச்சிவசப்படுவீர்கள், இதனால் இருவருக்கிடையே புரிந்துணர்வு பாதிக்கப்படும். இன்று நீங்கள் அமைதியான நட்பான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும். இன்று பணப்புழக்கம் காணப்படும். இன்று உங்களின் பிரியமான ஒருவரின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். மன உளைச்சல் காரணமாக இன்று தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை நிறம்.