Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தலைக்கவசம் போடல” ஆட்டோவுக்கு அபராதம்…. குழம்பி நிற்கும் ஓட்டுநர்…!!

தலைக்கவசம் அணியாததால் ஆட்டோ ஓட்டுனருக்கு அபராதம் விதிக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் குளச்சலை சேர்ந்தவர் செல்வாகரன். வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வந்த இவரது மொபைல் எண்ணுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில் செல்வாகரன் தலைக்கவசம் அணியாமலும், வாகனத்தில் அதிவேகமாக சென்றதாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமல் வாகனம் ஓட்டியதாக குறிப்பிட்டு அதற்கு காவல்துறையினர் சார்பாக அபராதம் விதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து மெசேஜில் கிடைத்த தகவலின் அடிப்படையில் செல்வாகரன் இணையதளத்தில் ஆராய்ந்துள்ளார். அப்போது போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காகவும் தலைகவசம் அணியாமல் சென்றதற்காக குலசேகரத்தை  சேர்ந்த காவல்துறையினர் செல்வராகவனின் ஆட்டோ என்னை குறிப்பிட்டு அபராதமாக 1600 ரூபாய் விதித்திருப்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநரான செல்வாகரன் கூறுகையில், “ஊரடங்கு காரணத்தினால் பல நாட்கள் வீட்டில்தான் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தேன்.

இத்தகைய சூழ்நிலையில் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் குலசேகரத்திற்கு எனது பகுதியில் இருந்து நான் போனதாக குறிப்பிட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணத்தினால் வருமானம் இல்லாமல் துயரப்பட்டு வரும் நிலையில் காவல்துறையினர் விதித்திருக்கும் அபராத தொகை எனக்கு மிகப் பெரிய தொகையாகும். எனவே இந்தக் குழப்பத்தை காவல்துறையினரே சரி செய்தாக வேண்டும். இந்த அபராதத்தை நான் செலுத்த மாட்டேன். அதோடு குலசேகர காவல் நிலைய ஆய்வாளர் விமலா அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |