Categories
மாநில செய்திகள்

புதிய வேளாண் சட்டத்திற்கு எதிர்க்‍கட்சிகள் கடும் எதிர்ப்பு …!!

நாடாளுமன்ற மாநிலங்களவை மழைக்கால கூட்டத்தொடர் 8 நாட்களுக்கு முன்பாகவே இன்றுடன் நிறைவுபெற்று அவை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி அன்று தொடங்குகிறது. 10 நாட்கள் மட்டுமே நடைபெற்றுள்ள கூட்டத்தொடரில் 25 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும். 6 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகவும் மாநிலங்களவை தலைவர் திரு. வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே புதிய வேளாண் மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்த விவகாரத்தில் அம்மலையில் ஈடுபட்ட 8 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து மாநிலங்களவை நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன வரும் அக்டோபர் மாதம் 1-ம் தேதி வரை கூட்டத்தொடரை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக முன்கூட்டியே இன்றுடன் முடிவடைந்துள்ளது. இதனால் மாநிலங்களவை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |