Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாகன ஓட்டுநரை கட்டிப்போட்டு கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்..!

திண்டுக்கல் அருகே நான்கு வழிச்சாலையில் லாரி ஓட்டுனரை கட்டிப்போட்டு பணம் மற்றும் தங்கத்தை கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்று லாரி ஓட்டுநர், நேற்று தூத்துக்குடியிலிருந்து உப்பு மூட்டைகளுடன் லாரியை ஓட்டிச் சென்றார். கர்நாடக மாநிலம் நோக்கிச் செல்லும்போது திண்டுக்கல் கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சற்று  ஓய்விற்காக லாரியை நிறுத்தி உள்ளார். அப்போது அங்கு இரு சக்கர வாகனங்களில் முகமூடி அணிந்தபடி அங்கு வந்த சிலர் அருண்குமாரை தாக்கி அவரைக் கட்டிப் போட்டு அவரிடமிருந்த பத்தாயிரம் ரூபாயையும் மற்றும் அவர் அணிந்திருந்த நகை ஆகியவற்றை கொள்ளை அடித்தனர்.

Categories

Tech |