Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“சானிடைசரால் துடைக்கையில் பழுதான டிவி” பெற்றோருக்கு பயம்…. சிறுவன் செய்த செயல்…!!

சானிடைசர் வைத்து டிவியை துடைத்து பழுதானதால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என்று அச்சத்தில் சிறுவன் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் குன்றத்தூர் சேர்ந்தவர்கள் வடிவேல் கவிதா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பிரைட் ஷாம் மகன் இருந்து வந்தான் பெற்றோர் இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வர சிறுவன் ஷாம் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளான். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஷாம் சானிடைசர் கொண்டு டிவியை சுத்தம் செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக டிவி பழுதடைந்து விட பெற்றோர்கள் திட்டுவார்கள் என பயந்துள்ளான். இதனையடுத்து ஷாம் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். ஷாமை தேடி வீட்டிற்கு வந்த நண்பர்கள் அவன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் சிறுவனின் பெற்றோருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த அவர்கள் மகனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து குன்றத்தூர் காவல்துறையினர் ஷாம் நண்பர்களிடம் விசாரித்ததில் டிவி பழுதானதால் பெற்றோர்கள் திட்டுவார்கள் என்ற அச்சமே தற்கொலைக்கான காரணம் என தெரிய வந்துள்ளது. மேலும் வழக்கு பதிந்தனர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |