திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெற்றது. இதையொட்டி ரங்கநாயகி தாயார் மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து வெண்பட்டு உடுத்தி கிளிமாலை, ஏலக்காய் ஜடைமாலை மற்றும் ஆபரணங்கள் சூடியபடி தங்கப் பல்லக்கில் புறப்பட்டு கண்ணாடி அறைக்கு சென்றார். பின்னர் அரையர்கள் சேவை கண்டு தங்க முலாம் பூசப்பட்ட கொலுமண்டபத்தில் பொற்பாதங்கள் தெரிய எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
Categories