Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோழியை விழுங்கிய மலைப்பாம்பு – வனத்துறையினர் மீட்டனர்..!!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள வடக்கு தச்சம்பட்டியில் கோழியை விழுங்கிய 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.

அன்னவாசல் அருகேயுள்ள வடக்குத்ச்சம் பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள பகுதியில் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை ஆடுகளை அவிழ்த்து விட அங்கு சென்றபோது தொடர்ந்து கோழிகள் சத்தம் கேட்டுள்ளது.

அருகே சென்று பார்த்த போது 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று கோழியை விழுங்கிக் கொண்டிருந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து அந்த மலைப்பாம்பை நார்த்தாமலை வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டது.

Categories

Tech |