Categories
உலக செய்திகள்

அதிபர் கிம் மேஜையில் இருந்த பொருள் என்ன?… களத்தில் இறங்கி கண்டுபிடித்த மக்கள்..!!

வடகொரிய அதிபரின் மேசையில் இருந்த பொருள் குறித்து தகவலை டுவிட்டர் பயனாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியானது. அந்த புகைப்படத்தில் அவரது மேசையில் இருந்த பொருள் ஒன்று பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. அது என்ன பொருள் என்பதை தெரிந்து கொள்ள டிவிட்டர் பயனர்கள் தங்கள் முயற்சியைத் தொடங்கினார். அதோடு அவர்களது முயற்சிக்கு வெற்றியும் கிடைத்தது.

இந்த மாதம் தனது ரயிலில் அதிபர் கிம் ஜாங் உன் பயணித்தபோது எடுத்த அந்த படத்தில் அவரது மேஜையில் இருந்த பொருள் என்ன என்பதை கண்டுபிடித்தாக வேண்டும் என டிவிட்டர் பயனாளிகள் களம் இறங்கிய நிலையில் அது ஒரு கிருமிநாசினி என்றும் அதோடு அது சுவிஸ் தயாரிப்பு என்றும் கண்டுபிடித்தனர். அதோடு அவர்கள் அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டு தயாரிப்பை பயன்படுத்தாமல் சுவிஸ் நாட்டின் தயாரிப்பை பயன்படுத்துவதை குறிப்பிட மறக்கவில்லை.

 

Categories

Tech |