பிரான்சில் மாணவிகள் அணியும் உடையை விமர்சித்த அமைச்சரை எதிர்க்கும் விதமாக மோசமான செயல்களை பெண்கள் செய்து வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டு கல்வி அமைச்சரான ஜீன் மிக்கேல் பள்ளி மாணவிகள் மற்றவர்களை தூண்டும் விதமாக உடைகளை அணியக்கூடாது என்றும், அவர்கள் ரிபப்ளிகன் ஸ்டைலில் தங்களுடைய உடையை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார். அதோடு இரவு விடுதிக்கு கடற்கரைக்கும் போவது போன்று அவர்கள் உடை அணியக் கூடாது என அமைச்சர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ரிபப்ளிகன் ஸ்டைல் என்றால் என்ன என பல பெண்கள் கேள்வி எழுப்பி சமூக ஊடகங்களில் அவரை கேலி செய்து வருகின்றனர்.
அவ்வகையில் பாடகியான ஜென்னி செர்ஹல் என்பவர் தனது உடலில் மூவர்ணக் கொடியை மட்டும் சுற்றிக்கொண்டு புகைப்படம் ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்துள்ளார். அதேபோன்று டெலக்ரோய்ஸ் என்ற பிரபல ஓவியர் வரைந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மூவர்ணக் கொடியுடன் பெண்ணொருவர் மேலாடை இன்றி இருக்கும் படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
அதுமட்டுமன்றி கல்வி அமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பெண்களுக்கு அந்நாட்டின் குடியுரிமை அமைச்சர் மர்லின் ஆதரவு தெரிவித்துள்ளார். இதனிடையே குறிப்பிட்ட ஒரு நாளில் இளம்பெண்கள் ஒன்றிணைந்து ஆழமான கழுத்து கொண்ட சட்டையும் குட்டை பாவாடையும் அணிந்து மேக்கப் போட்டுக்கொள்ள தீர்மானித்திருப்பதாக குடியுரிமை அமைச்சர் தெரிவித்ததோடு தனது ஆதரவு அவர்களுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.