Categories
மாநில செய்திகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு… கொரோனா தொற்று உறுதி…!!

தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பால் முக்கிய அரசியல்வாதிகள், பிரமுகர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத  நிலையில், கொரோனா கால கட்டத்தில் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். இதனிடையே, தேமுதிகவின் 16-ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

அதனை முன்னிட்டு, சென்ற 15ம் தேதி கோயம்பேட்டில் இருக்கும் அவருடைய கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்ட நிலையில் அறிகுறிகள் இல்லாமலேயே தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |