புதிய கல்விக் கொள்கை குறித்த கருத்துகணிப்பு ஆன்லைன் மூலமாக இன்று நடைபெற உள்ளது.
புதிய கல்விக் கொள்கை குறித்து பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வந்த நிலையில் தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக உயர்கல்வித்துறை இன்று ஆன்லைன் மூலமாக கருத்துக்களை கேட்க இருக்கிறது. புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை மூலம் சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை இன்று ஆன்லைன் வழியில் கருத்துக்களை கேட்க உள்ளது. இந்தக் கருத்து கேட்பு நிகழ்ச்சியில் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் போன்றோர் பங்கேற்கலாம் என உயர்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.