Categories
மாநில செய்திகள்

“கேப்டன் பூரண நலத்துடன் உள்ளார்” – தேமுதிக தலைமை அலுவலகம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  உடல்நிலை தற்போது சரியாக உள்ளது என தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேமுதிக தலைவர்  விஜயகாந்த் கொரோனா பரவல் காரணமாக கட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்திலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன்பின் மியாட் மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த பரிசோதனையில் அறிகுறிகள் எதுவும் இல்லாமலே தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விஜயகாந்த்  உடல் நலத்துடன் இருப்பதாகவும்,  மேலும் அவருக்கு  லேசான கொரோனா அறிகுறி இருந்து இப்போது சரிசெய்யப்பட்டு விட்டது எனவும் தேமுதிக தலைமை அலுவலகம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Categories

Tech |