சென்னையில் விரைவில் புறநகர் ரயில் போக்குவரத்தை தொடக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக ரயில்வே டிஐஜி தெரிவித்துள்ளார்.
கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து சென்னையில் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அண்மையில் பேருந்துகள் இயங்கத் தொடங்கிய போதிலும் புறநகர் ரயில்சேவை மட்டும் இன்னும் தொடங்கபடாமலேயே உள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரயில்வேத்துறை டிஐஜி அருள்ஜோதி விரைவில் சென்னையில் புறநகர் ரயில் போக்குவரத்து தொடங்கும் என கூறினார். அதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.