ஹோண்டா நிறுவனத்தால் 2 மதத்திற்கு முன் வெளிவந்த CB300R பல முன்னணி நிறுவனத்தின் பைக்குகளுக்கு சவால் விட்டு வருகிறது.
பிரபல நிறுவனமான ஹோண்டா நிறுவனம் இரண்டு மாதத்திற்கு முன் CB300R என்ற மோட்டார்சைக்கிளை இந்தியாவில் லாஞ்சிங் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ.2.41 லட்சமாகும். இந்த புது ரக பைக் இரண்டே மாதத்தில் இந்தியாவில் விற்று தீர்ந்த நிலையில் சுமார் 500 பைக்குகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து முன்பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த பைக்கில் 286CC , லிக்விட்-கூல்டு, 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 32 பி.எஸ். மற்றும் 27.5 NM செயல்திறனை வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. புதிய CB300R மோட்டார்சைக்கிள் இந்தியாவில் C.K.D . முறையில் கொண்டு வரப்படுகிறது.
இந்த புது ரக CB300R பைக் கே.டி.எம். 390 டியூக், கவாசகி நின்ஜா 400, யமஹா YZF-R3 உள்ளிட்ட முன்னணி நிறுவன மோட்டார்சைக்கிள்களுக்கு சவாலாக அமைந்திருக்கிறது.