Categories
தேசிய செய்திகள்

கோவில்களில் தொடரும் அட்டூழியங்கள் – ஜெகன் மோகன் ரெட்டி வீடு முற்றுகை..!!

ஆந்திராவில் உள்ள கோவில்களில் தொடர்ந்து நடைபெறும் அட்டூழியங்களை கண்டித்து ஆந்திர முதலமைச்சர் திரு ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கனகதுர்க்கை அம்மன் கோவில் வெள்ளி தேரில் பொருத்தப்பட்டிருந்த நான்கு சிம்மங்கலில் 3 வெள்ளி சிம்மங்கள்  மாயமாகின. அந்த வீதியில் உள்ள லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில் தேருக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். சிறிய கோவில்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக கூறி முதலமைச்சர் திரு ஜெகன்மோகன் ரெட்டியின் இல்லத்தை பஜ்ரங்தள் அமைப்பினர் முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |