Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளிர்பானத்தில் மயக்க மருந்து… சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர்… போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

 சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து  கலந்து கொடுத்து கர்ப்பமாக்கிய இளைஞரை   காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டனர்.

நாகப்பட்டணத்தின் திருமருகல் அருகே தெற்குனேரி ஜீவா நகரில் வசித்து வருபவர் ராஜேஷ்.29 வயதான அவர் கொத்தனார் பணி செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் ராஜேஷ்க்கு பழக்கம் ஏற்பட்டது. சம்பவம் நடந்த அன்று சிறுமியின் பெற்றோர்கள் பணிக்கு சென்று விட்டனர். சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ராஜேஷ் அங்கு சென்று சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார்.

அதனை  பருகிய உடன் சுயநினைவை இழந்த சிறுமியை ராஜேஷ் பாலியல் பலாத்காரம் செய்தார் இதனால் அச்சிறுமி கர்ப்பமாகி உள்ளார் .சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த பெற்றோர் இது  குறித்து  மகளிடம் கேட்டபோது நடந்த சம்பவத்தை சிறுமி கூறினார் உள்ளார் .இதைத் தொடர்ந்து பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர் .அதன் அடிப்படையில் ராஜேஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து  கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றன.

Categories

Tech |