Categories
சென்னை மாநில செய்திகள்

ராஜிவ் காந்தி கொலை வழக்கு!பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு…சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முப்பது நாட்கள் விடுப்பு அளித்து உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும்  மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மனு கொடுத்திருந்தார். கொரோனா தொற்று பரவி வந்த நிலையில் தன் மகனுக்கு ஏற்கனவே உடல் சம்பந்தமான கோளாறு இருப்பதால் பெரிதும் பாதிக்கப்படுவார் என்று 90 நாட்கள் பரோல் வழங்கி முழுமையாக நீங்கும் வரை பரோலில் வர அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நல்ல பாதுகாப்பில் இருக்கிறார் அவருக்கு எந்தவிதமான உடல் பாதிப்பும் இல்லை,அதே நேரத்தில் அவருக்கு தேவையான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருகிறது. வெளியில் இருப்பதை விட சிறையில் இருப்பது அவருக்கு பாதுகாப்பு என தமிழக சிறைத்துறை தரப்பிலும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவரது தாயாரின் மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அப்போது அற்புதம்மாள் தரப்பில் கூறியதாவது,தங்களுக்கு வயதாகிவிட்டதால் தங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் விடுப்பு கேட்பதாக வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இன்று பிறப்பித்த உத்தரவில் 90 நாட்கள் விடுப்பு கோரியிருந்த நிலையில் இன்று 30 நாள் விடுப்பில் பேரறிவாளனை அனுப்ப வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு கிடைத்த ஒரு வாரத்தில் அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்.

இதுதொடர்பான நிபந்தனைகளையும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது அங்கே தங்கி இருக்கும் இடத்தை விட்டு  வெளியூர்களுக்கு செல்ல கூடாது அது மட்டுமில்லாமல் எந்த தேதியில் விடப்படுகிறதோ அதிலிருந்து  31 வது நாள் சிறைக்குள் வரவேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்படும்

அந்த பரோலில் எந்த  முகவரியை கேட்டிருக்கிறார்களோ அதே இடத்தில் தான் தங்கியிருக்க வேண்டும். ஊடகத்திலோ அமைப்புகளிலோ சந்தித்து பேசக்கூடாது என்ற நிபந்தனைகளும் விதிக்கப்படும்.நிபந்தனைக்கு ஒத்துக் கொள்ளும் பட்சத்தில் தான் பரோலில் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |