Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருட வந்த இடத்தில் தூங்கிய இன்ஜினியர் …!!மடக்கிப் பிடித்த வீட்டு உரிமையாளர்..!!

திருட வந்த இடத்தில் போதையில் தூங்கியதால் இன்ஜினியர் வசமாக காவல்துறையிடம் சிக்கினார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் அருகே  அடையாளம்பட்டு பகுதியில் வசித்து வருபவர் பிரபாகரன். 53 வயதான இவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.வசித்து வரும் வீட்டில் தண்ணீர் சரியாக வரவில்லை என்ற காரணத்தால் பிளம்பரை வரவழைத்தார். வீட்டின் மொட்டை மாடிக்கு இருவரும் சென்றபோது அங்கு ஒரு வாலிபர் பதுங்கி இருப்பதை கண்டு நீ யார்? எனக் கேட்டார் சற்றென்று அந்த வாலிபர் வீட்டு மாடியில் இருக்கும் படிக்கட்டு வழியாக வேகமாக கீழே இறங்கி ஓடினார் முன் கதவு பூட்டி இருந்ததால் தப்பிக்க முடியவில்லை.

பிளம்பர் மற்றும் பிரபாகரன் இருவரும் சேர்ந்து வாலிபனை பிடித்தனர். அந்த வாலிபர் வீட்டில் திருட வந்தது தெரிந்ததும் உடனடியாக மதுரவாயல் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அந்த வாலிபனை விசாரித்த போது அவன் கொளத்தூரை சேர்ந்த முத்தழகன் என்பதும்  23 வயது என்ஜினீயரிங் பட்டதாரியான அவர் வீட்டு சூழ்நிலை மற்றும் கடன் பிரச்சனைக்காக அப்பகுதியில் உணவு டெலிவரி செய்யும் வேலையை செய்து பார்த்துவந்ததும் தெரிய வந்தது.

அப்போது பிரபாகரன் வீடு தனியாக இருப்பதை கண்டு கொள்ளையடிக்க முடிவு செய்துஉள்ளார். இதனால் நள்ளிரவில் மது அருந்திவிட்டு இருசக்கர வாகனத்தை வேறு பகுதியில் நிறுத்திவிட்டு வீட்டின் சுற்றுச்சுவரை ஏறிகுதித்து உள்ளே நுழைந்து மாடிக்கு சென்றார் . அவரால் மேலே  இருக்கும் வீட்டின் கதவை உடைக்க முடியாததால் கதவைத் திறந்த பிறகு கொள்ளை அடிக்கலாம் என நினைத்து போதையில் இருந்த அவர் தூங்கிவிட்டார்.

அதற்குள்ளேயே பொழுது விடிந்துவிட்டது. தூக்கத்திலிருந்து எழுந்த முத்தழகன் இப்போது வீட்டில் ஆள் நடமாட்டம் இருப்பதால் கீழே சென்றால் மாட்டிக்கொள்வோம் என்று  இரவில் எல்லோரும் உறங்கி விடுவார்கள் அப்போது தப்பிச் செல்லலாம் என நினைத்து கொளுத்தும் வெயிலில் உணவு ஏதுமின்றி அங்கேயே பதுங்கி இருத்தார்.

வீட்டின் உரிமையாளரும் பிளம்பரும் மொட்டை மாடிக்கு வந்த போது சிக்கினார் என விசாரணையில் தெரியவந்தது. அவரை கைது செய்து போலீஸ் விசாரித்து வருகிறது இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. குடும்ப சூழ்நிலைக்காக திருடிச் சென்று போதையில் தூங்கியும், பல மணி நேரம் பசியாலும், திருடுவதற்கு முன்னரே காவல்துறையிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |