Categories
மாநில செய்திகள்

கிராமிய இசைக்கலைஞர்களின் அருமையான விழிப்புணர்வு நிகழ்ச்சி …!!

மயிலாடுத்துறையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பாக ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கிராமிய இசைக்கலைஞர்கள் பங்கேற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

மயிலாடுத்துறை அருகே மாத்தடுக்கை கிராமத்தில் ஊரடங்கால் ஆறு மாதமாக தொழிலின்றி வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் மயிலாடுத்துறை மாவட்டம் கிராமிய இசைக்கலைஞர்கள் மற்றும் மெல்லிசை கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சமூக விலைகளை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிந்து வரவேண்டும். மற்றும் விலகலை கடைபிடிக்காமல் முககவசம் அணியாமல் வருபவர்களை கொரோனா தாக்கும் என்றும் எமதர்மன் வேடமிட்டு தமிழக அரசுயின் விதிமுறைகளை கடைபிடிக்க கூறினார்.

கடைபிடிக்காதவர்களை எமதர்மன் பாசக்கயிறு மூலம் கொள்வது போன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட தலைவர் டி.எல். ராஜேஸ்வரன் தலைமையில் ஆறு மாதமாக வேலைவாய்ப்பு இல்லாமல் தவித்து வரும் கிராமியக் கலைஞர்கள் மற்றும் மெல்லிசை கலைஞர்களுக்கு நிவாரணங்களையும் பாரம்பரிய பறை இசை கலைஞர்களுக்கு 5 பறைகளையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |