தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் பச்சிளம் குழந்தையை புதரில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் கட்டிடம் அருகே உள்ள ஒரு முட்புதரில் ஒரு பெரிய பையில் இக்குழந்தை வீசப்பட்டு இருந்தது .பையிலிருந்து குழந்தை சத்தம் கேட்டதும் அப்பகுதியில் சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.அப்பகுதிக்கு வந்த போலீசார் பையை சோதனையிட்டபோது வெள்ளைத் துணியில் கட்டப்பட்ட மூட்டை போல் இருந்தது.
அதை பிரித்து பார்த்தபோது தொப்புள்கொடி கூட வெட்டாத நிலையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று அதில் இருந்தது.அதை பார்த்த போலீஸ் அதிர்ச்சி அடைந்தனர்.அக்குழந்தை உயிருடன் இருந்ததால் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.
பச்சிளங் குழந்தையை எரிய காரணம் கள்ள காதலா அல்லது காதலன் விட்டுச் சென்றதால் கர்ப்பமாகி குழந்தை பெற்றதன் காரணமாக குழந்தையை அப்பெண்ணே கொலை செய்ய மனமின்றி மூட்டைகட்டி பாதுகாப்பாக வைத்து சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருந்தாலும் குழந்தையை வீசி சென்ற தாய் யார் ?என போலீஸ் விசாரிக்கிறது.மேலும் ஸ்ரீரங்கத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெண் யாருக்காவது குழந்தை பிறந்து வெளியேறி இருக்கிறார்களா என்றும் விசாரிக்கின்றனர்.