Categories
அரசியல்

இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு..!!

அமெரிக்க பங்குச்சந்தைகள் மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் ஏற்பட்ட சரிவின் எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகளும் இன்று சரிவை சந்தித்தன.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 11 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது. இன்று காலை சரிவுடன்  தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் மாலை சரிவுடன் நிறைவடைந்தன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,116 புள்ளிகள் சரிந்து 36 ஆயிரத்து 553 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிப்டி 326 புலிகள் குறைந்தது 10 ஆயிரத்து 805 புள்ளிகள் ஆக இருந்தன.

இன்றைய வர்த்தகத்தில் குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகளை தவிர்த்த அனேக நிறுவனங்களின் பங்குகள் சரிந்து காணப்பட்டன. அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்ததன்  பாதிப்பு ஆசிய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. இதனால் இந்தியா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிவை கண்டன.

Categories

Tech |