Categories
உலக செய்திகள்

சிறுவனை சாக்குப்பையில் கட்டி… :அறைக்குள் அடைத்து கொன்ற பயங்கரம்”… துணை போன பெற்றோர்… பல ஆண்டுகளுக்கு பின் பெண்ணுக்கு கிடைத்த தண்டனை..!!

4 வயது சிறுவனை சாக்கு மூட்டைக்குள் அடைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஜெர்மனியில் 1988ம் வருடம் பெண் ஒருவர் தன்னை அமைப்பு ஒன்றின் தலைவியாக நிலைநிறுத்த சிறுவன் ஒருவனுக்கு பேய் பிடித்து விட்டதாகவும், ஹிட்லரின் மறுபிறப்பு தான் அச்சிறுவன் என்றும் கூறி சிறுவனின் பெற்றோர் உட்பட தனது அமைப்பில் இருந்த அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அச்சிறுவனை சாக்கு மூட்டை ஒன்றில் கட்டி அதிக அளவில் வெயில் இருக்கும் நாளில் சிறிதும் காற்று வசதி இல்லாத அறை ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர். இதனால் சாக்கின் உள்ளேயே மூச்சுத் திணறி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

2005 ஆம் ஆண்டு வரை சிறுவன் இறந்தது விபத்து என அதிகாரிகள் நம்பிக் கொண்டிருந்தனர். ஆனால் அதை அமைப்பை சேர்ந்த சிலர் சாட்சி கூற முன்வந்தால் சிறுவன் கொலை செய்யப்பட்ட உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. சுமார் ஒரு வருடம் நடைபெற்ற அந்த விசாரணையில் அந்த சிறுவன் மட்டுமல்லாது இன்னும் பல சிறுவர்கள் சந்தித்த கொடுமைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிமன்றம் 73 வயதாகும் அந்தப் பெண்ணிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

Categories

Tech |