கர்ப்பிணி மனைவி சுறாவிடம் இருந்து தனது கணவனை பத்திரமாக மீட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவின் அட்லாண்டாவில் சேர்ந்த ஆண்ட்ரூ என்பவர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் குடும்பத்தினருடன் படகு ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடலில் நீந்த முடிவு செய்து ஆண்ட்ரூவும் உறவினர்கள் சிலரும் நீச்சல் உபகரணங்களுடன் கடலில் குதித்துள்ளனர். அச்சமயம் ஆண்ட்ரூ நீச்சல் அடித்துக் கொண்டிருந்த இடத்தில் ரத்த நிறத்தில் தண்ணீர் மாறியுள்ளது. அதோடு அங்கு சுறா மீனின் துடுப்பு போன்று தெரிவதையும் கர்ப்பிணி மனைவியான மார்க்கெட் பார்த்துள்ளார்.
உடனடியாக தான் கர்ப்பிணி என்பதைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் கடலில் குதித்து 9 அடி நீள சுறாவிடம் அகப்பட்ட ஆண்ட்ரூவை மீட்டு தானும் அதனிடம் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பாக படகுக்கு வந்து சேர்ந்தார். சுறா ஆண்ட்ரூவின் தோள்பட்டையில் கடித்து இருந்ததால் ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.