அமெரிக்கப் பங்குச் சந்தைகள் மற்றும் ஆசிய பங்குசந்தைகளில் ஏற்பட்ட சரிவின் எதிரொலி இந்திய பங்குச் சந்தைகளும் நேற்று சரிவை சந்தித்தன.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 11 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது. நேற்று காலை சரிவுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் நேற்று மாலை சரிவுடன் முடிவடைந்தன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,116 புள்ளிகள் சரிந்து 36 ஆயிரத்து 553 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தை நிப்டி 326 புள்ளிகள் குறைந்து 10, 805 புள்ளிகளாகவும் இருந்தன.
நேற்றைய வர்த்தகத்தில் குறிப்பிட்ட சில நிறுவனப் பங்குகளை தவிர்த்த அனேக நிறுவனங்களின் பங்குகள் சரிந்து காணப்பட்டன. அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்ததன் பாதிப்பு ஆசிய பங்குச் பங்கு சந்தைகளில் எதிரொலித்தது. இதனால் இந்தியா, ஜப்பான், ஹாங்காங் ஆகிய உள்ளிட்ட நாடுகளில் பங்குச் சந்தைகளும் சரிவை கண்டன.