புதுச்சேரியில் டாட்டூ நிலையத்தில் விலை பேசுவதில் ஏற்பட்ட தகராறில் கடை உரிமையாளரை மர்ம நபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரை சேர்ந்தவர் சரவணன் காமராஜ் நகர் சாலையில் டாட்டூ மற்றும் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சரவணன் மற்றும் ஊழியர்கள் 4 பேர் நிலையத்தில் இருக்கும் போது அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் டாட்டூஸ் போடுவதில் விலை நிர்ணயம் தொடர்பாக பிரச்சினை செய்தன. இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது அவர்கள் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கினர். இதில் மூர்த்தி என்று ஊழியர் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.