Categories
சினிமா தமிழ் சினிமா

என் படம் இப்படித்தான் இருந்தது …. டாக்டர் படத்தில் கைகலப்பு…. டைரக்டர் சொன்ன முக்கிய தகவல்….!!

சிவகார்த்திகயேன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம்  குறித்து   சில தகவல்களை டைரக்டர் நெல்சன் பகிர்ந்துள்ளார் .

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர  இருக்கும் அடுத்த திரைப்படம் ‘டாக்டர்”  அத்திரைப்படத்தை பற்றி டைரக்டர் நெல்சன் கூறுவதாவது .“எனது இயக்கதில்  வெளிவந்த கோலமாவு கோகிலா, மோதல், காதல்  நகைச்சுவை என பல அம்சங்கள் நிறைந்த படமாக அமைந்திருந்தது. அந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றியும் கிடைத்தது. அதுபோல அதிரடி காட்சிககள் நிறைந்த ‘டாக்டர்’ படமும் கலகலப்பப்பு நிறைத்தபடமாக இருக்கும் கதைப்படி, சிவகார்த்திகேயன் கதாபாத்திரம் ஒரு டாக்டர் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மருத்துவ தொழில் மட்டுமல்லாது  வேறு ஒரு வேலையும் இருக்கிறது.

அதை பற்றி விளக்கமாக கூறினால் கதை வெளியே வந்துவிடும் கைகலப்பும், கலகலப்பும் கலந்த படமாக இருக்கும் என கூறினார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிகை ப்ரியங்கா அருள்மோகன் நடித்து இருக்கிறார். வினய்ராய், வில்லனாக நடித்துள்ளார். சுனில்ரெட்டி யோகிபாபு, அருண் அலெக்சாண்டர், மிலிந்த சோமன் ஆகிய நட்சத்திரங்கள்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர் . . சிவகார்த்திகேயன்  கொடாப்பாடி ஜே.ராஜேஷ் ஆகிய இருவரும்இணைந்து  தயாரித்திருக்கும் டாக்ட்டர்படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் ஆவ படப்பிடிப்பு  முடிவடைந்தநிலையில்  . ‘டப்பிங்’ பணிகள் நடைபெற்று வருகின்றன .

Categories

Tech |