இரண்டாவது மாடியில் இருந்து கீழே தள்ளி கல்லூரி மாணவரை கொலை செய்ததற்காக தாய்-மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் உள்ள திருவேங்கட கிருஷ்ணா நகரில் வசித்து வரும் குப்புசாமி என்பவரின் மகன் ஸ்ரீராம். 19 வயதான அவர் சென்னையில் உள்ள கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். குப்புசாமியின் வீட்டில் சில வருடங்களாக ராஜா என்பவர் குடும்பத்துடன் லீசுக்கு வசித்து வருகிறார்.அந்த வீட்டிற்கு ராஜாவின் மகனான சங்கர் (28) காலியான அந்தவீட்டிற்க்குகுப்புசாமியின் அனுமதியின்றி பூட்டு போட்டார் .
இதனையடுத்து ஸ்ரீராம் அந்த பூட்டை உடைக்க முயன்றார் .அப்போது இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது.அப்போது இரண்டாவது மாடியிலிருந்து தள்ளி விட்டதால் ஸ்ரீராம் கீழே விழுந்தார். கீழே விழுந்ததில் தலைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். ஸ்ரீராமை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவலை அறிந்த அரும்பாக்கம் காவல்துறையினர் இதனை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் .அதில் லீசுக்கு இருக்கும் ராஜா வீட்டின் உரிமையாளர் குப்புசாமி 5 லட்சம் லீசுக்கான பணத்துடன் மேலும் 2 லட்சம் கடன் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறார். ஆனால் இப்போது வரை அந்தக் கடனுக்கு உரிய வட்டியும் கொடுக்கவில்லை .
அசல் தொகையும் கொடுக்காததால் தனக்கு பணம் கொடுக்கும் வரை அந்த வீட்டிற்க்கு யாருக்கும் வாடகைக்கு வரக்கூடாது என்பதற்காக ராஜாவின் மகன் சங்கர் அந்த வீட்டிற்கு பூட்டு போட்டு விட்டதாகவும் ,பூட்டை உடைக்கும் போது ஏற்பட்ட தகராறில் மாடியிலிருந்து தள்ளிவிட்ட தே ஸ்ரீராம் கீழே விழுந்து உயிரிழந்தார் என தெரிந்தது.இச்சம்பவம் தொடர்பாக சங்கர் மற்றும் அவரது தாய் பானு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் .