மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாளாக இருக்கும். இன்று நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியமாகின்றது.
நீங்கள் கடின உழைப்பின் மூலமே பணியில் வெற்றிப் பெறமுடியும். உங்களின் பணிகளை முடிப்பதில் தாமதம் காணப்படும். இது உங்களுக்குக் கவலையை ஏற்படுத்தும். இன்று உங்களின் கட்டுப்பாட்டை இழப்பீர்கள். அதனை உங்களின் துணையிடமும் வெளிப்படுத்துவீர்கள். பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்று உங்களின் துணையிடம் அன்பாக நடந்துக் கொள்ளவேண்டும். பணப்புழக்கம் இன்று போதுமானதாக இருக்காது. இன்று உங்களின் சேமிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். வாய்ப்புகள் குறைந்தே காணப்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை கண் மற்றும் பற்களுக்கான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். உணவு முறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் நிறம்.