பாலிவுட் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை ரகுல் ப்ரீத்சிங்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதை மும்பை என்.சி.பி. அதிகாரி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மர்ம மரணத்தில் போதைப்பொருள் தொடர்பு குறித்து புலன் விசாரணை நடத்தி வரும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு என்சிபி அதிகாரிகள் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் புகழ்பெற்ற நடிகையான ரகுள் பிரீட் சிங் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு நேற்று முன்தினம் சம்மன் அனுப்பினார்கள். ஆனால் இத்தகைய சம்மன் எதுவும் தனது ஹைதராபாத் வீட்டிற்கோ, மும்பை விலாசத்திற்கு வரவில்லை என நடிகை ராகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
இதனை அடுத்து பல வழிகளிலும் நடிகை ராகுல் பிரீத் சிங்கை தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அப்போது தனக்கு சம்மன் வந்திருப்பதை நடிகை ஒப்புக்கொண்டதாகவும் மும்பையில் என்சிபி அதிகாரிகள் தெரிவித்தனர்.
விரைவில் விசாரணைக்கு தான் ஆஜர் ஆவதாக ரகுல் தெரிவித்ததாகவும் அதிகாரிகள் கூறினார்கள். இதனிடையே பிரபல ஹிந்தி நடிகைகள் ஷ்ரத்தா கபூர், சாரா அலி கான் ஆகிய இருவரும் நாளை மும்பையில் என்சிபி அதிகாரிகள் முன்னிலையில் விசாரணைக்கு ஆஜர் ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.