இன்றைய பஞ்சாங்கம்
26-09-2020, புரட்டாசி 10, சனிக்கிழமை, தசமி திதி இரவு 07.00 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி.
உத்திராடம் நட்சத்திரம் இரவு 07.25 வரை பின்பு திருவோணம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 0.
இராகு காலம் – காலை 09.00-10.30,
எம கண்டம் மதியம் 01.30-03.00,
குளிகன் காலை 06.00-07.30,
சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
இன்றைய ராசிப்பலன் – 26.09.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு புதிய தொழிலை தொடங்கும் ஆர்வம் கூடும். வெளியூர் பயணம் செல்ல நேரும்.உறவினர்கள் வருகையால் வீட்டிற்கு மகிழ்ச்சி கூடும். தொழிலில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பழைய பாக்கி அனைத்தும் வசூலாகும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரநிலை மந்தமாக இருக்கும்.வீட்டில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு உண்டாகும். தேவையற்ற செலவுகளை குறைத்தால் பணப் பிரச்சனை நீங்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு வீட்டில் தேவையில்லாமல் பிரச்சினை உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் தடை கூடும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் பிறரை நம்பி பணத்தை கொடுக்கவோ வாங்கவோ செய்யாதீர்கள்.வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருங்கள் அதுவே நல்லது.
கடகம்
உங்களின் ராசிக்கு வீட்டில் மன மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடக்கும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பாலும் லாபம் உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் சுப செலவு உண்டாகும். எந்த முடிவு எடுத்தாலும் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அமையும். உத்யோகத்தில் புதிய நபர்கள் வருவார்கள். வெளியூர் செல்வதினால் அனுகூலம் உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.
கன்னி
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் மன உளைச்சல் உண்டாகும். வீட்டில் நிம்மதி இல்லாத சூழ்நிலை இருக்கும்.உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறுவதில் காலதாமதம் ஏற்படும். உடல் நலனில் கவனம் கொள்ளுங்கள் அதுவே நல்லது. தொழிலில் வேலையாட்கள் பொறுப்பாக இருப்பார்கள். வருமானம் அதிகரிக்கும்.
துலாம்
உங்களின் ராசிக்கு தொழிலில் உடன் இருப்பவர்களால் மனகசப்பு கூடும். வீட்டில் இருப்பவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடு உண்டாகும்.எந்த காரியம் செய்யும் போதும் சிந்தித்து செயல்படுங்கள் அதுவே நல்லது. நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தெய்வ ஈடுபாடு கொள்வீர்கள்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்குஉற்றார் உறவினர்களால் மனதிற்கு நிம்மதி தரும் செய்தி வந்து சேரும். வீட்டில் ஒற்றுமை கூடும். உத்தியோகத்தில் எடுக்கும் முயற்சி அனைத்தும் வெற்றியை கொடுக்கும். சுபகாரியம் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் இதுவரை இருந்த எதிரிகள் தொல்லை நீங்கும்.
தனுசு
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் சுறுசுறுப்பில்லாமல் செய்வீர்கள். குழந்தைகளால் வீட்டில் தேவையற்ற செலவு வரக்கூடும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகளால் சில இடையூறு உண்டாகும். லாபம் கிடைக்கும்.தொழிலில் இதுவரை இருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் துணிச்சலுடன் செய்து வெற்றி காண்பீர். வீட்டில் பெண்களால் பெருமை சேரும். தொழிலில் உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டாகும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கூடும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்களால் சுப செய்தி வரும். ஆடம்பரப் பொருட்களை வாங்க ஆர்வம் கூடும். உத்யோகத்தில் எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழிலில் உடன் இருப்பவர்களின் அனுகூலம் கிட்டும். சுப காரியங்கள் வெற்றி கொடுக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் செலவும் இருக்கும். நண்பர்களின் ஆல் மனநிம்மதி நீங்கும். சுப காரியங்களில் தடைகள் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.