வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற வேண்டிய சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய சர்வதேச திரைப்பட விழா கடந்த 1952ம் ஆண்டு முதல் வருடம் தோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விழா கோவாவில் வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கோவா முதலமைச்சர் திரு பிரமோற்சாவன் உறுதி செய்திருந்தார். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் சர்வதேசத் திரைப்பட விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
கோவாவில் நவம்பர் மாதம் நடைபெற வேண்டிய விழா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.