போராட்டத்தின் போது சாலையில் கிடந்த நபரின் தலையில் போலீஸ் அதிகாரி தனது சைக்கிளை ஏற்றிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவின் சியாட்டில் நகரை சேர்ந்த பிரொனா டெய்லர் எனும் கறுப்பின பெண் கொலை செய்யப்பட்டதில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை விடுதலை செய்ய கென்டக்கி அட்டர்னி ஜெனரல் முடிவு செய்தார். இதனால் அமெரிக்காவின் சியோட் நகரிலும் மற்ற பல இடங்களிலும் புதிதாய் போராட்டங்கள் தொடங்கின. இந்நிலையில் நடைபெற்ற போராட்டத்தின் போது சாலையில் ஒருவர் கீழே விழுந்து கிடந்த போது அவரது தலையின் மீது காவல் அதிகாரி தனது சைக்கிளை ஏற்றியுள்ளார். இந்த செயல் காணொளியாக பதிவாகி சமூக வலைதளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதன் பிறகு சாலையில் கிடந்த நபரின் தலையில் சைக்கிளை ஏற்றிய போலீஸ் அதிகாரி நிர்வாகத்தின் விடுப்பில் வைக்கப்பட்டிருப்பதாக நகர காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீஸ் பொறுப்பு அலுவலகம் விசாரணை மேற்கொள்ள தொடங்கியது. அதோடு இச்சம்பவம் கிங் கவுண்டி ஷெரிப் அலுவலகத்திற்கு விசாரணையின் நிமித்தம் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் எஸ்பிடி காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதோடு போராட்டத்தின்போது 10க்கும் அதிகமானவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
The police at the #seattleprotests just ran over an injured mans head with their bikes. @SeattlePD is this how you train your officers? pic.twitter.com/c4e146tsmi
— Martin Banks (@WarlockBranis) September 24, 2020