சீனாவில் கடந்த மூன்று வருடங்களில் 16,000 மசூதிகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய தன்னார்வ புள்ளியியல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது
ஆஸ்திரேலியாவின் தன்னார்வ புள்ளியியல் நிறுவனம் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், சீனாவின் வடமேற்கு பகுதியில் அமையப் பெற்றிருந்த 16,000 மசூதிகள் கடந்த மூன்று வருடத்தில் சீன அதிகாரிகளால் இடித்து தகர்க்கப்பட்டுள்ளன. உரும்கி, காஸ்கர் போன்ற நகர்ப்புற மையங்களுக்கு வெளியே அமையப் பெற்றிருந்த 8,500 மசூதிகள் இடிக்கப்பட்டன. அந்த நாட்டின் வட மேற்கில் இருக்கும் நிங்ஜியா மண்டலம் தன்னாட்சி அதிகாரத்தை பெற்ற பகுதியாகும். அங்கிருக்கும் டாங்ஜிங் கவுன்டியின் வெய்ஸு என்ற பகுதியில் ஹுய் இனத்தை சேர்ந்த முஸ்லிம் மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர்.
உய்கூர் இனத்தை சேர்ந்த முஸ்லிம்களுக்கு அடுத்ததாக இந்த இன முஸ்லிம்கள் இருக்கின்றனர். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் சிறுபான்மையினர் சீன நாட்டின் முகாமில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவ்வாறு சிக்கி இருப்பவர்கள் அவர்களின் மத நம்பிக்கைகளையும் மரபுகளையும் கைவிட வேண்டுமென நிர்பந்திக்கப் படுவதாக கூறப்படுகிறது. வெய்ஸு பகுதியில் இருந்த மசூதியை இடித்து புதிதாக மசூதி ஒன்று கட்டப்பட்டது. பின்னர் அரசின் விதிகளை மீறி கட்டி இருப்பதாக கூறி சீன அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பின்னர் அந்த மசூதி இடிக்கப்பட்டது.
சுமார் 15,500 மசூதி இடிக்கப்படுவதிலிருந்து தப்பித்து உள்ளனர. கல்லறைகள், மசூதிகள் மற்றும் புனித யாத்திரை வழிகள் என இஸ்லாமிய மதத் தளங்களில் ஒரு பகுதி முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டது. அதே நேரம் அப்பகுதியில் அமையப்பெற்றுள்ள புத்த கோவில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் போன்றவை அளிக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை சீன அரசு ஏற்க மறுத்ததோடு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் இது சீன எதிர்ப்பு அறிக்கை என கூறி அவ்வறிக்கையில் எந்த ஒரு நம்பகத்தன்மையும் இல்லை என தெரிவித்துள்ளது.