பெண்ணை கொலை செய்த உடலை எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி தாலுகா நாட்ராம் பாளையம் அருகே பஞ்சல் என்ற துணை கிராமம் உள்ளது. அக்கிராமத்தின் அருகே ஒரு வனப்பகுதி உள்ளது. அப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் சடலம் கிடப்பதாக அஞ்செட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்து உள்ளது . அதை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அங்கு ஒரு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு பாதி எறிந்த நிலையில் கிடந்தார்.அதனோடு அவர் உடல் நிர்வாண நிலையில் கிடந்தது உள்ளது. பெண் அணிந்திருந்த காலணியும்,சில பேப்பர்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையிலும் கிடைத்தன. இதையடுத்து காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
கொலை செய்யப்பட்ட பெண் யார்? என தெரியவில்லை. அந்தப் பெண் தேனிகனிக்கோட்டை, ஓசூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர் அல்லது கர்நாடக மாநில எல்லைப் பகுதியை சேர்ந்தவர் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.கர்நாடகா மாநில பகுதியில் கொலை செய்துவிட்டு உடலை அஞ்செட்டி பகுதியின் அருகே போட்டு அடையாளம் காணாத அளவில் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து இருக்கலாம் என காவல்துறை சந்தேகப்படுகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் இப்பகுதியில் இருந்து எந்த பெண்ணாவது காணாமல் போய் இருக்கிறார்களா? வழக்கு பதிவாகி உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். காணாமல் போனவர்களின் பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர்.