சீனாவுடனான எல்லைப் பிரச்சனை குறித்து ஐநா சபையில் விவாதிக்க மாட்டோம் என இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ஐநா சபைக்கான தூதர் திருமூர்த்தி அவர்கள் நியூயார்க்கில் வைத்து செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அதில் அவரிடம் இந்தியாவிற்கு சீனாவுடன் இருந்துவரும் எல்லைப் பிரச்சனை குறித்து ஐநாவில் விவாதம் செய்ய கேட்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த டிஎஸ்.திருமூர்த்தி நிச்சயமாக மாட்டோம்.
இரு தரப்பினரும் இந்த பிரச்சனையில் நம்பிக்கையை வளர்க்கும் விதமான வழிமுறைகளை கையாளும் முதிர்ச்சியை பெற்றுவிட்டோம். இரு தரப்பினருமே இந்த பிரச்சினையில் சரியாக செயல்பட்டு வருகிறோம். இந்த விவகாரத்தில் ஐநா சபைக்கு எந்த ஒரு பங்கும் இருப்பதாக நாங்கள் பார்ப்பதில்லை” என தெரிவித்துள்ளார்.