எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் அவரது டுவிட்டர் பதிவில் “எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடல்எப்போதும் நான் விரும்பி கேட்கும் ஒன்றாகும். அவர் மறைவுக்கு மிகுந்த வருத்தமடைகிறேன். சாகர் திரைப்படத்தில் அவர் பாடிய “சர்ச் மேரே யார் ஹை” என்ற பாடல் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்றாகும். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் எனது பிரார்த்தனையும் நினைவுகளும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனே இருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.