விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புலியம் பட்டியில் பிரதமரின் பிறந்தநாளன்று நிறுவப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் கொடி கம்பத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக் கோரி அந்த கட்சியினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பிரதமரின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அருப்புக்கோட்டை புளியம்பட்டி வெள்ளையாபுரம் தெருவில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதியதாக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு அதில் பாரதி ஜனதா கட்சியின் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இந்த கொடிக்கம்பத்தில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் தனித்தனியாக கழற்றி ஆங்காங்கே வீசிவிட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி அருப்புக்கோட்டை நகர பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அருப்புக்கோட்டையில் ஒட்டப்படும் பாரதி ஜனதா கட்சியின் போஸ்டர்கள் மர்ம நபர்களால் கிழிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கொடிக்கம்பம் சேதப்பட்டிருப்பதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.