அதிமுகவில் முதல்வர் வேட்பாளருக்கு பஞ்சம் இல்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள சத்திரப்பட்டியில் வடக்கு சுப்பிரமணியபுரம் பகுதியில் அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் கடம்பூர் ராஜு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எதிர்காட்சிகளில் முதல்வர் வேட்பாளர்களுக்கு பஞ்சம் இருப்பதாக முன்னால் மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் கூறிய கருத்து தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுகவில் முதல்வர் வேட்பாளருக்கு பஞ்சம் இல்லை எனவும் மற்ற கட்சிகளில் முதல்வர் வேட்பாளருக்கு பஞ்சம் இருந்தால் அதற்கு தாங்கள் பொறுப்பல்ல எனவும் கூறினார்.