Categories
மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்ததால் வெறுப்பு மருமகனை கொன்ற மாமனார்..!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்ட மருமகனை கூலிப்படை வைத்து ஆணவக்கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹேமன் என்பவர் அவந்தி என்ற பெண்ணை கடந்த எட்டு ஆண்டுகளாக காதலித்தார். திருமணத்துக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஜூன் மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு ஹைதராபாத் நகரில் வசித்தனர். இந்த நிலையில் கடந்த வாரம் பெண்ணின் தாய் மாமா அவரை தொடர்பு கொண்டு அவந்தி பெற்றோர் உடன் இணைத்து வைப்பதாக கூறி அவர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

செல்லும் வழியில் சந்தேகமடைந்த ஹேமன் மற்றும் அவந்தி காரில் இருந்து குதித்து தப்ப முயன்றனர். இதில் அவந்தியை அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் ஹேமந்த்தை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். இது குறித்து அவந்தி பெற்றோருக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். கணவனைக் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த நிலையில்  நகர் பகுதியில் ஒரு முட்புதரில் கேமன் கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்துக்கு  விரைந்த போலீசார் விசாரணையில்  அவந்தியின் தந்தை லட்சுமண ரெட்டி, அவந்தியின் தாய், மாமன்கள் விஜயரெட்டி, விஜயேந்திரர் உள்பட 12 பேரை கைது செய்தனர்.

Categories

Tech |