எடப்பாடி அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி மற்றும் காச நோய் கண்டறியும் கருவியினை சுகாதாரத்துறை இணை இயக்குனர் தொடங்கி வைத்தார்.
காச நோய் தொற்று அதிகமாக பரவி உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் 2 லட்சம் மதிப்பீட்டில் ரத்தம் சேமிப்பு வங்கி மற்றும் முற்றிய காச நோய்களை முன்கூட்டியே கண்டறியும் கருவி 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எடப்பாடி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை இணை இயக்குனர் மலர்விழி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது காச நோய் பிரிவு துணை இயக்குனர் கோகுல கிருஷ்ணன் எடப்பாடி அரசு மருத்துவமனை இயக்குனர் சரவண குமார் மற்றும் மருத்துவர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்.